அறிமுகம்

அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தின் , 9 ஆவது அட்டவணையின் 1  ஆம் பட்டியலின் படி, வியாபாரப் பெயர் பதிவு செய்யும் பொறுப்பு மாகாண சபைகளுக்கு கையளிக்கப்பட்டதுடன் , அந்தந்த மாகாண சபைகளால் தமது மாகாணங்களில் வியாபார  பெயர் பதிவுச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக  தயாரிக்கப்பட்ட நியதிச்சட்டங்களின் செயற்படுவதற்காக  இந்த திணைக்களம்  நிறுவப்பட்டுள்ளது.
இதன்படி, 1990 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க வியாபாரப் பெயர் நியதிச் சட்டம் 1991.01.01 தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன்,  2013.10.01  ஆந் திகதி தொடக்கம்  2011 இன்  ஆம் இலக்க  திருத்தப்பட்ட மேல் மாகாண வர்த்தகம், கூட்டுத்தாபனங்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்படாத வணிக நிறுவனங்களுக்கான புதிய வியாபாரப் பெயர் நியதிச் சட்டம். செயல்படுத்தப்பட்டது.
மேல்மாகாணத்தின் அனைத்து வியாபாரப் பெயர் பதிவு நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் மற்றும் முக்கியமாக திம்பிரிகசாய மற்றும் கொழும்பு மாவட்டத்தின் பிரதேச செயலகங்களுக்கு உரித்தான வியாபார பெயர் பதிவு சான்றிதழ்களை வழங்குதல் ஆகியவை இத்திணைக்களத்தால் மேற்கொள்ளப்படுகின்றன, மேலும் மேல் மாகாணத்தின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்குமுரிய  வியாபார பெயர் பதிவு நடவடிக்கைகள், சம்பந்தப்பட்ட மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்தும் செய்து கொள்வதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.