• வியாபாரப் பெயர் பதிவுச் சான்றிதழ்களை வழங்குவதற்கான ஒரு நாள் சேவை இடம் பெறுகின்றதா?
இந்த நேரத்தில் இடம்பெறவில்லை
• வியாபாரப் பெயர் பதிவுச் சான்றிதழ்களை வழங்க எவ்வளவு காலம் எடுகும்?
உரிய விண்ணப்பப் படிவம் மற்றும் அதனுடன் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களைச் சரியாகச் சமர்ப்பித்தால், அதிகபட்சம் 3 முதல் 5 வேலை நாட்களுக்குள் சான்றிதழைப் பெறலாம்.
• வியாபார நிலையத்தை உறுதிப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்படும் உறுதியின் /குத்தகை ஒப்பந்தத்தின் /குத்தகை உடன்படிக்கையின் சான்றளிக்கப்பட்ட நகலுடன் நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டுமா?
ஆம். அது சான்றளிக்கப்பட்ட நகலுடன் ஒப்பிடப்பட்டு அதே சந்தர்ப்பத்தில் திருப்பி வழங்கப்படும்.
• உறுதி/ வாடகை ஒப்பந்தம்/குத்தகை ஒப்பந்தம் உண்மையான பிரதி என்பது எவரால் சான்றளிக்கப்பட வேண்டும்?
நொத்தாரிசி ஒருவரின் மூலம்
• மேல் மாகாணத்தில் ஏதேனும் ஒரு தனியுரிமை அல்லது கூட்டு விபாபாரத்தை உங்கள் திணைக்களத்தில் பதிவு செய்ய முடியுமா?
இந்தத் திணைக்களம் பிரதானமாக திம்பிரிகசாய பிரதேச செயலகப் பிரிவு மற்றும் கொழும்பு மாவட்டத்தில் உள்ள எந்தவொரு பிரதேச செயலகப் பிரிவுக்கும் சொந்தமான வியாபாரப் பெயர்களைப் பதிவு செய்கிறது, மேலும் பதிவாளரின் அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மேல் மாகாணத்தில் உள்ள ஏனைய பிரதேச செயலக அலுவலகங்களினால் தமது அதிகார பிரதேசத்துக்குரிய.வியாபாரப் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன.
• வியாபாரப் பெயர் பதிவுக்கு தேசிய அடையாள அட்டை கட்டாயமானதா?
ஆம். சாசனத்தின் விதிகளின்படி இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
• தேசிய அடையாள அட்டை தொலைந்தது / காணாமல் போனமை /தெளிவின்மை அல்லது மீண்டும் தயாரிக்க ஒப்படைக்கப்பட்டிருந்தால்?
தொலைந்தது / காணாமல் போயிருந்தால் , உரிய பிரிவிற்குரிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியிடமிருந்து பெறப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
தெளிவற்ற சந்தர்ப்பத்தில்,தேசிய அடையாள அட்டையுடன் அதை உறுதிப்படுத்த சாரதி அனுமதிப் பத்திரம்/வெ ளி நாட்டு கடவச்சீட்டினை முன்வைக்க முடியும்.
மீண்டும் தயாரிக்க கிராம சேவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் கிராம சேவகரினால் சான்றுப்படுத்தப்பட்டு வழங்கப்பட்ட பற்றுச்சீட்டின் பிரதி.
• வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டு எத்தனை நாட்களுக்குள் பதிவிற்காக முன்வைக்கப்பட வேண்டும் ?
வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டு 14 நாட்களுக்குள் பதிவிற்காக முன்வைக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாத விடத்து பதிவாளரினால் இடமளிக்கப்படும் மேலதிக கால எல்லையினுள் பதிவு செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும். ( இங்கு பதிவாளரினால் 30 நாட்கள் காலம் வழங்கப்பட்டுள்ளது.)
• தாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்திற்காக தாமதக் கட்டணத்தை தீர்மானிப்பவர் யார் ?
· தாமதக் கட்டணம் தீர்மானிப்பவர் பதிவாளர் அல்லது அதற்காக அதிகாரம் பெற்ற அதிகாரியான பிரதேச செயலாளர்
• விண்ணப்பத்தினை ஒப்படைக்க வருகை தரவேண்டிய தினம் மற்றும் நேரம் என்ன?
விண்ணப்பத்தினை ஒப்படைப்பது வார நாட்களில் மு.ப.9.00 தொடக்கம் பி.ப. 3.00 வரை
காரியாலயம் திறந்து வைக்கப்படும் நேரம் மு.ப.8.30 தொடக்கம் பி.ப. 4.15 வரை.
• வியாபாரப் பெயர் பதிவுக்கு விண்ணப்பம். கிராம அலுவலகரின் அறிக்கை,தேசிய அடையாள அட்டை, இடத்தினை உறுதிப்படுத்தும் ஆவணம்/ கடிதங்கள் மற்றும் வியாபார அனுமதிப் பத்திரத்தினைத்த தவிர வேறு ஆவணங்களை கோர முடியுமா ?
ஆம் . வியாபார பெயர்கள் நியதிச்சட்டத்தின் விதிகளின் படி பதிவாளரினால் சந்தர்ப்பத்திற்கேற்ப கோரக் கூடிய வேறு ஆவணங்கள் காணப்பட்டால், விண்ணப்பத்தாரி/ விண்ணப்பத்தாரியினால் அந்த ஆவணங்கள் ஒப்படைக்கப்பட வேண்டி உள்ளது.
• பதிவு செய்யப்பட்ட எந்தவொரு வியாபார பெயர் சான்றிதழின் பிரதி ஒன்றினைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியுமா?
இந்த திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வியாபார பெயர் சான்றிதழ்களின் பிரதிகளுக்கு மட்டுமே உரிய விண்ணப்பத்தினை நிரப்பி வேண்டு கோள் விடுக்க முடியும்.
• சான்றுப்படுத்தப்பட்ட பிரதியைப் பெற்றுக்கொள்ள தேவைப்படும் ஆவணங்கள் எவை ?